"உக்ரைனை மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவை" - அதிபர் ஜெலென்ஸ்கி
போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உக்ரைன் மீட்பு மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற ஜெலென்ஸ்கி, ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்ட முழு சேத விவரங்களையும், நாட்டின் தேவைகளையும் விவரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவது ஒரு நாட்டுடைய பணி அல்ல, உலக நாடுகளின் பொதுவான பணியாகும் என்று குறிப்பிட்டார்.
மேலும், உக்ரைனை மறுசீரமைப்பது உலகளாவிய அமைதிக்கான ஆதரவிற்கு மிகப்பெரிய பங்களிப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments